புதுச்சேரியின் சட்டப்பேரவை கட்டிடத்தில் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளித் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்குமுன்பு , புதுச்சேரியில் 22 அரசு கட்டிடங்களில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தினமும் 20 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க கூடிய வகையில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கட்டிடத்தில் நாளொன்றுக்கு 100 யூனிட் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன . இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் மேலும் , இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.