உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனாவானது வெளிநாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதனால் உயிர்பலிகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் வேகமாக பரவி விடக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் வாகனங்கள், நடந்து செல்வோர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது. வாரத்தின் ஏழு நாட்களும் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ ஆளுநர் சிவாம்பிகா, தூய்மைப் பணியாளர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.