பொதுமக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான பாரதி கண்ணம்மாவில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை உணர்த்தும் வகையிலான புகைப்படம் வெளியே வந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் நடிக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா எப்போது ஒன்றாக சேர்வார்கள் என்பது குறித்த ஆவலும் பொதுமக்களிடையே உள்ளது. இவ்வாறான சூழலில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா அடிக்கடி ஒன்றாக சந்தித்துக் கொள்ளும் படியான காட்சிகள் அந்த சீரியலில் அதிகமாக இடம் பெற்று வருகிறது.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் என்ன நடக்கும் என்பதை உணர்த்தும் வகையிலான புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது பாரதியை சீரியலில் நடிக்கும் வெண்பா வழக்கம்போல் ஏற்றி விடுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.