Categories
உலக செய்திகள்

புகை பிடித்தால் கொரொனா பாதிப்பு தீவிரமாகும்…. இங்கிலாந்து பல்கலைக்கலகத்தின் ஆய்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

புகைப்பிடித்தல் கொரோனா பாதிப்பை அதிகமாக்குவதாகவும் இது உயிருக்கே ஆபத்தாக நேரிடலாம் எனவும் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றி கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோணா குறித்து பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ,பிரிஸ்டல் பல்கலைக்கழகம், நாட்டிங்காம் பல்கலைக்கழகம், ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை நடத்தி அதற்கான முடிவுகளை வெளியிட்டனர்.

அந்த ஆய்வில் அவர்கள் கூறியதாவது. “புகைப்பிடித்தால் இதயநோய், புற்றுநோய் போன்ற பிற நோய்கள் பாதிப்பது போலவே கொரோனாவும் தீவிரமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே புகைபிடிப்பதை கைவிடுவதற்கு இது ஏற்ற தருணமாக இருக்கிறது.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 469 பேரை ஆராய்ந்ததில் புகைப்பிடிப்பதற்கும் கோரொனா தீவிரம் அடைவதற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. புகை பிடிக்காதவர்கள் உடன் ஒப்பிடுகையில், புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிக்கின்ற போது ஆஸ்பத்திரியில் சேர வாய்ப்பு 80 சதவீதம் அதிகமாக உள்ளது. மேலும் இவர்கள் இறக்கவும் வாய்ப்பு உள்ளது”. இவ்வாறு ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |