இங்கிலாந்து இளவரசியின் கணவருக்கு தர்ம சங்கட நிலையை உருவாக்கிய இளம்பெண் தன்னுடைய தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசியின் கணவரான ஜாக் ப்ரூக்ஸ் பேங்க் தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி அனைவரது மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சியாவது, படகில் நிற்கும் ஜாக் துண்டு மட்டும் அணிந்துள்ளார். இவருக்கு அருகே மேலாடையின்றி ஒரு பெண்ணும், வெறும் உள்ளாடையுடன் மற்றொரு பெண்ணும் உள்ளார்கள்.
இதனையடுத்து ஒரு பெண்ணின் இடுப்பை அணைத்துக்கொண்டு ஜாக் நிற்பது போலும் உள்ளது. இந்தப் புகைப்படம் தொடர்பான தவறான கருத்திற்கு அவருடைய மாமியார் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது தன்னுடைய மருமகன் மிகவும் நல்லவர் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் அந்த புகைப்படத்தில் மேலாடையின்றி நின்ற Erica Pelosini என்னும் அந்த இளம் பெண் நான் மேலாடையின்றி நின்றது முறையல்ல, தன்னுடைய இந்த செயலால் இளவரசிக்கும் ஜாக்கிற்கும் மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாக்கியதை நினைத்து மிகவும் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து தன்னுடைய ஆடை நனைந்து போனதால்தான் நான் அதை கழற்றினேன் என்றும், அந்த புகைப்படத்தில் இடம்பெற்ற 3 பெண்களுமே ஜாக்கின் தொழில்முறை கூட்டாளிகள் என்றும் தெரிவித்துள்ளார்.