ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அதன் தலைநகரில் சுமார் 40 நிமிடங்கள் தங்களது வலிமையை காட்டும் விதமாக நடத்திய ஆயுத அணிவகுப்பு தொடர்பான காட்சிகள் அந்நாட்டிலுள்ள அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள அரசு தொலைக்காட்சியில் தலிபான்களின் ஆயுத அணிவகுப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
அதாவது ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டின் தலைநகரில் தங்களது வலிமையை வெளிகாட்டும் விதமாக ஆயுத அணிவகுப்பை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட ஆயுத அணிவகுப்பில் பல முக்கிய பொருள்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த அணிவகுப்பை தலிபான்கள் சுமார் 40 நிமிடங்கள் நடத்தியுள்ளார்கள்.