ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க படைவீரரான தன்னுடைய கணவரை இழந்த மனைவி தனக்கு பிறந்த பெண் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டின் படை வீரர்களில் ஒருவரான ரைலி மெக்குலம் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களுக்கு பயந்து காபூல் விமான நிலையத்தின் மூலம் வெளியேற நினைத்தவர்களுக்கு உதவி செய்துள்ளார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் அதிபயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதில் ரைலி மெக்குலம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த சமயம் அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ரைலி மெக்குலமின் மனைவிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அவ்வாறு பிறந்த அந்தப் பெண் குழந்தையின் புகைப்படத்தை மெக்குலமின் மனைவி இணையத்தில் பதிவிட்டதோடு மட்டுமின்றி “உனது தந்தையின் பெயரை நீ சுமந்து செல்வாயாக” என்றும் தெரிவித்துள்ளார்.