புகை பிடிப்பதால் முதலில் அவர்களின் நுரையீரல் தான் அதிகமாக பாதிக்கப்படும். அவற்றின் அறிகுறிகள்…
புகை பிடிப்பது, நுரையீரல்களில் இயற்கையாகவே உள்ள சுவாசச் சுத்திகரிப்பு செயல்களைப் பாதிப்பதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சரிவர அகற்றப்படாமல் நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் தொடர் இருமல், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள் வருகின்றன.
புகைபிடிப்பது நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளைச் சேதப்படுத்தி அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைப் பாதிக்கின்றன. இதனால் ஆக்சிஜனை எடுக்கவும், கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றவும் நுரையீரல் கஷ்டப்படுகிறது. இதற்குத் துணை கொடுக்க இதயம் அதிகமாக இயங்கும்பொழுது, அதுவும் பாதிக்கப்படுகிறது.
மனதளவில், நாளடைவில் பயம், பதற்றம், கோபம், சமநிலையற்றதன்மை, ஈடுபாடற்றதன்மை போன்றவை புகைபிடிப்போரின் இயல்பாகிறது.
உடல் முழுவதுமுள்ள நரம்பு மண்டலத்தைத் தூண்டுவது புகை செய்யும் வேலை. ஆனால், ஒருவரின் நரம்பு மண்டலம் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளதோ அவ்வளவு பிரச்சனையின்றி அவரது முதுமை கழியும்.
நுரையீரல் பாதிப்படையும் பொழுது ஏற்படும் அறிகுறிகள்:
- அடிக்கடி சளி பிடித்தல்
- தொடர் இருமல்
- இருமும் போது சளி வருதல்
- சிறிது தூரம் நடந்தாலே மூச்சு இரைப்பு ஏற்படுதல்.