Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

புகைபிடிப்பவரிடம் இருந்து இதேபோல் விலகி இருங்கள்..!!

எங்கு எல்லாம் வைத்து புகைபிடிக்க கூடாது, அதிலிருந்து  நம்மை எவ்வாறு காத்து கொள்வது..?

உலக மக்கள்தொகையில், தோராயமாக கோடி, லட்சம் மக்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. புகைபிடிப்பவரை விட அதை அருகில் இருந்து சுவாசிக்கும் நபர்களுக்கே அதிகம் பாதிப்பு உண்டாகிறது.

வீட்டுக்குள்ளோ, காரிலோ அல்லது மூடப்பட்டுள்ள எந்த இடத்திலும் யாரையும் புகைக்க அனுமதிக்காதீர்கள். புகை அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து உங்கள் குழந்தையை அப்புறப்படுத்துங்கள். உணவு விடுதிகளுக்குச் செல்லும்போது புகையில்லா இடத்தையே தேர்வு செய்யவும்.

புகைக்கும்போது மின்விசிறியாலோ, ஜன்னலைத் திறப்பதாலோ புகையின் வாசனை வேண்டுமானால் போகலாம்; ஆனால் அதன் ரசாயனங்கள் அறையின் பொருட்களில் படிந்து தொடர்ந்து தீய விளைவுகளை எற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், மூடிய இடங்களிலும், மக்கள் நெரிசல் உள்ள இடங்களிலும் புகை பிடிப்பதைத் தவிருங்கள். முக்கியமாக குழந்தை, மற்றும் கர்ப்பிணி பெண்கள் அருகில் புகைக்காதீர்கள்!

Categories

Tech |