Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காரில் புகையிலை பொருட்களை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் பகுதியில் எப்போதும்வென்றான் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் குளத்தூர் பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன், பொன்னுத்துரை, அப்பனசாமி என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரை கைது செய்ததோடு, அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |