வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜீவ் நகர் பகுதியில் வசிக்கும் காளிராஜ் என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் அவரது வீட்டில் வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் மூட்டையையை சோதனை செய்தபோது அதில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த மூட்டையில் 399 பாக்கெட்டுகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காளிராஜை கைது செய்ததோடு அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.