சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சந்திப்பு பகுதியில் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் அம்பாசமுத்திரம் பகுதியில் வசிக்கும் ராஜூ என்பதும், மேலும் அவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜூவை கைது செய்ததோடு அவரிடமிருந்த 14 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.