Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவூர் பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி, இராஜலிங்கம் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சத்தியமூர்த்தி, இராஜலிங்கம் ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 150 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |