புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியில் சேவல் சண்டை, சூதாட்டம், மது விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் வெள்ளக்கோவில் சாலையில் உள்ள சேகர் என்பவர் கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக விஷத்தன்மை உள்ள 7 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சேகரையும் அவருடன் விற்பனை செய்துவந்த கொங்கு நகர் பகுதியில் வசிக்கும் அன்பழகன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு அங்கிருந்த 7 கிலோ விஷத்தன்மையுள்ள புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதற்கு முன்பு அவர்கள் இந்த கடையில் தொடர்ந்து விஷத்தன்மையுள்ள புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்ததால் காவல்துறையினர் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.