Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக…. புகையிலை பொருட்கள் விற்பனை…. 26 பேர் கைது….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 26 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 24 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 3 கிலோ 685 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று சமாதானபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலின்படி அந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செய்யது அப்துல் ஹமீம் மற்றும் காஜா மைதீன் ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |