Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் நாச்சிபாளையம் பகுதியில் வசிக்கும் சிலம்பரசன் என்பதும், அவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

மேலும் சிலம்பரசன் காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காலேஜ் சாலையில் உள்ள கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அங்கு 45 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிலம்பரசன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த முகமது ரியாஸ் ஆகிய இருவரையும் கைது செய்ததோடு அவர்கள் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |