சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகன் குறிச்சி பகுதியில் பாளையங்கோட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலத்தில் வசிக்கும் சந்திப் குமார் என்பதும், அவர் சட்ட விரோதமாக புகையிலை விற்று கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சந்திப் குமாரை கைது செய்ததோடு அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.