சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெட்டி கடையில் ஒருவர் சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்களை விற்று கொண்டிருந்தார்.
இதனைப பார்த்த காவல்துறையினர் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் சுப்பையா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சுப்பையாவை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று பாளையங்கோட்டை பகுதியில் உள்ள வாகைகுளம் பகுதியில் வசிக்கும் சங்கரன் என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.