மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தில் உள்ள ஏழுமலை என்பவரின் மளிகை கடையில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஏழுமலை, டி.அத்திப்பாக்கம் வெள்ளத்துரை, பாண்டியன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள் மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.