புகையிலை பொருட்கள் விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள குடிமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பெரியப்பட்டி பகுதியில் வசிக்கும் லட்சுமணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமணனை கைது செய்ததோடு அவரிடமிருந்த 101 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.