புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆறுமுகநேரி வடக்கு பஜாரில் வசிக்கும் பாலாஜி என்பவரது கடையில் திடீரென சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் கடையில் ஆரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலாஜியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.