புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதூர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீனிவாசன் என்பவர் தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் ஸ்ரீனிவாசனை கைது செய்ததோடு அவரிடமிருந்து 1283 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.