அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் தாதாபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அத்திப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் நின்று கொண்டிருந்தவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள காளபெருமாள்பட்டி கிராமத்தில் வசிக்கும் திருமுருகன் என்பதும், மேலும் அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக எடுத்து சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர் திண்டிவனம் சந்தை மேடு பகுதியில் உள்ள ஐஸ் கம்பெனி பகுதியில் தங்கி, ஐஸ் வியாபாரம் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருமுருகனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.