Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்த அதிரடி சோதனை…. கடையில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பேருந்து நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியில் அய்யப்பன் என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அய்யப்பனை கைது செய்ததோடு, அவரது கடையில்  இருந்த 65 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் வேலவன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

Categories

Tech |