பழம்பெரும் இந்திய பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மிகவும் புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசை பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் தனது 90 வயதில் நேற்று காலமானார். ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் 930 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்த இவர், 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசை வாழ்க்கையில் தொடர்ந்து, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற பாடகரின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.