Categories
உலக செய்திகள்

நாங்கா பொறுப்பல்ல…. பேச்சுக்கு முற்றுபுள்ளி…. அறிக்கை வெளியிட்ட NSO குழுமம்…!!

NSO குழுமத்தின் PEGASUS MALEARE SOFTWARE உளவு பார்ப்பதாக வெளியான புகார்களை மறுத்து அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டிலுள்ள NSO நிறுவனத்தின்  PEGASUS MALEARE SOFTWARE உலகிலுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களின் தொலைபேசியிலுள்ள தகவல்களை உளவு பார்ப்பதாக ஃபார்பிடன் ஸ்டோரிஸ் என்னும் அமைப்பு புகார் எழுப்பியுள்ளது. இந்த உளவுப் பட்டியலில் 300க்கும்  மேற்பட்ட இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து NSO குழுமம் இந்த புகாரை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “இந்த தகவலானது ஃபார்பிடன் ஸ்டோரிஸ் அமைப்பினரால் தவறுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி எந்தவொரு  ஊடகத்தின் கருத்துகளுக்கோ அல்லது வதந்திகளுக்கோ NSO குழுமம் கண்டுகொள்ள போவதில்லை.

இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் PEGASUS SOFTWARE ரின் குறிக்கோளோ அல்லது குறிப்பிட்ட இலக்கோ என்ற எண்ணம் தவறானது. மேலும் இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் தொலைபேசி எண்ணிற்கும் NSOவிற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. இந்த தொழில்நுட்ப குழுமத்தில் வாடிக்கையாளர்களின் தரவோ அல்லது பெகாஸ் அமைப்பை இயக்கவோ அனுமதியில்லை ஆனால் ஏதேனும் நடவடிக்கைகளில் தகவல்கள் அளிக்கும் பொறுப்புள்ளது. இந்த தொழில்நுட்பம் தவறான நோக்கத்தில் செயல்பட்டு அதற்கான சான்றுகள் அளிக்கும் பட்சத்தில் NSO குழுமம் அதை ஆராய்வோம் இல்லையெனில் தேவைப்பட்டால் அந்த செயலியை முடக்கிவிடுவோம். மேலும் NSO குழுமம் உலகில் உள்ள அனைவரின் உயிர்களை காக்கும் பணியை தொடந்து செய்யும்” என தெரிவித்துள்ளது.

Categories

Tech |