டீக்கடையில் விற்பனை செய்த 30 கிலோ புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாபுதுக்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாற்கர சாலையில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் டீக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனின் டீ கடையில் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் கடையில் 30 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் முருகன் மீது வழக்கு பதிவு செய்ததோடு விற்பனைக்கு வைத்திருந்த 30 கிலோ புகையிலை பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.