புஜாரா துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள் ஒருநாள் தொடரை 1.2 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் டி20 தொடரில் 2.1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று அதனை சமன் செய்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா களமிறங்குவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் புஜாரா துணை கேப்டனாக இருந்தார். தற்போது இரண்டு போட்டிகளில் அவர் சரியாக விளையாடாத காரணத்தால் அவரிடமிருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. எனவே துணை கேப்டன் பதவியில் இருந்து புஜாரா நீக்கப்பட்டுள்ளார்.