புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதிகளில் இருக்கும் கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரத்தினம் மற்றும் காமராஜபுரம் சாலையில் இருக்கும் இரண்டு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
பின்னர் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களான லட்சுமணன் மற்றும் விஸ்வேஸ்வரன் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.