சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொசப்பாடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை விசாரணை நடத்தியதில் அவர் செல்லம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பரத் என்பதும், சங்கராபுரத்தில் இருக்கும் மளிகை கடையில் புகையிலை பொருட்களை வாங்கி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து பரத்தை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவர் கொடுத்த தகவலின் பேரில் சங்கராபுரம் பூட்டை சாலையில் இருக்கும் மளிகை கடை வியாபாரி பாக்கம்புதூர் ஊரைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 820 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.