சட்ட விரோதமாக பெட்டி கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகாமையிலிருக்கும் பாடியந்தல் கிராமத்தில் இருக்கின்ற பெட்டிகடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடை உரிமையாளரான ராஜரத்தினம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 260 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.