புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் ரோட்டில் அமைந்திருக்கும் மண்ணாங்கட்டி என்பவரின் பெட்டிகடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் 11 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது சம்பந்தமாக கடை உரிமையாளரான மண்ணாங்கட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 16 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.