Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சரக காவல்துறை டி.ஐ.ஜி விஜய்குமாரின் தனிபடையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் நிலக்கோட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது குல்லிசெட்டிபட்டியில் மளிகை கடையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் 180 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடை உரிமையாளரான சுரேஷை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |