புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த மளிகை கடையை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் இருக்கும் மளிகை கடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து கடை உரிமையாளரான ஏழுமலை என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 85 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் மளிகை கடையை வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர்.