சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வில்லரசம்பட்டி பகுதியில் காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தப்பி ஓட முயன்ற அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மேலும் விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்துள்ளது.இதனையடுத்து சரவணன் பையில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 16 கிலோ புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.