பெட்டிக் கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.புதூர் கிராமத்தில் இருக்கும் பெட்டி கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மீனா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதன்பின் அவரிடம் இருந்த 21 புகையிலை பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் முன்னிலையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.