பெட்டிக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழையூர் பகுதியில் இருக்கின்ற பெட்டிகடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு விற்பனைக்காக புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து இது சம்பந்தமாக கடை உரிமையாளரான துரை என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.