சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்றபனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் சாகுல் ஹமீது, லியாத் அலி ஆகிய இருவரும் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சோதனையில் பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களையும் கைது செய்துள்ளனர்.