கடலில் படகு கவிழ்ந்து விழுந்ததில் 57 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவில் கும்ஸ் பகுதியில் உள்ள கடலில் படகு ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் நைஜீரியாவிலுள்ள கானா மற்றும் காம்பியாவைச் சேர்ந்த மக்களுடன் புலம் பெயர்ந்துள்ளவர்களும் பயணித்து உள்ளனர். இதனை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் செய்தி தொடர்பாளர் சஃபா மெஸ்லி தெரிவித்துள்ளார். இதில் 57 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும் பலர் கடலோர காவல்படையினர் மற்றும் மீனவர்களால் உயிர் தப்பியுள்ளனர் என்று மெஸ்லி கூறியுள்ளார். இதனை அடுத்து உயிர்பிழைத்தவர்கள் அளித்த தகவலின் படி நீரில் மூழ்கியவர்களில் 2 குழந்தைகள் மற்றும் 20 பெண்கள் அடங்குவர் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த படகில் ஆப்பிரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்தோர் சிலர் ஐரோப்பாவை நோக்கி பயணித்ததாக மெஸ்ஸி கூறியுள்ளார்.மேலும் ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கு ஐரோப்பா புலம்பெயர்ந்தோர் இடம்பெயர்வு மேலாண்மை மூலம் சிறப்பாக கவனிக்கப்படுகின்றனர் என்று மெஸ்ஸி கூறியுள்ளார்.