Categories
உலக செய்திகள்

‘இது தான் காரணம்’…. புலம்பெயர்தல் எண்ணிக்கை குறைவு…. வெளிவந்துள்ள அறிக்கை….!!

புலம் பெயர்தலானது கடந்த ஆண்டு முதல் தற்பொழுது வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கனடா போன்ற பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் புலம் பெயர்தல் என்பது மிகவும் குறைந்துள்ளது. அதிலும் கடந்த 2020ல் 3.7 பில்லியன் பேர் 25 பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இது 2003க்கு பிறகு தற்பொழுது தான் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக குடும்ப புலம்பெயர்தல், தற்காலிக பணியாளர் புலம்பெயர்தல் என பலவகை புலம்பெயர்தல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கல்வி அனுமதி பொறுத்தவரையில் 2020ல் 70% குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் புதிதாக புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கையும் 2020ல் 31% வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை அடுத்து மறு குடியமர்த்தலும் 65% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “2020 முதல் 2021 ஆம் ஆண்டு அதாவது தற்பொழுது வரை கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடுகளுக்குள் வெளிநாட்டவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தான் பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் புலம்பெயர்ந்தலானது குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |