Categories
சினிமா தமிழ் சினிமா

புளிய மரத்தில் தொங்கி விளையாடும் கார்த்தி…வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் கார்த்தி புளிய மரத்தில் தொங்கியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது கல்லூரி நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் தனது கல்லூரி நாட்களில் அதிகம் பல்லவன் பேருந்தில் செலவழித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதன் பிறகு கார்த்தி தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டு ‘சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்த உடை இதுதான்’ என்று தனது நினைவுகளை பகிர்ந்திருந்தார்.

Karthi Fans 24x7ˢᵘˡᵗʰᵃᶰ (@KarthiFans24x7) | Twitter

இந்நிலையில் நடிகர் கார்த்தி புளியமரத்தில் தொங்கியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் சிறு வயதில் இருந்தே இந்த மரத்தில் தொங்க முயற்சி செய்ததாகவும் இப்பொது அந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது  இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

Categories

Tech |