14-வது நாளாக புலியை தேடும் பணியானது தோல்வியில் முடிவடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரம் மற்றும் மசினகுடி வனப்பகுதியில் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் பொருத்திய கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகாததால் வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். சுமார் 14-ஆவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக தேடியும் புலி தென்படவில்லை. எனவே மசினகுடி முதுமலை எல்லையில் அதிரடி படை மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மாயார் பகுதியில் ஒரு மாட்டை புலி அடித்து கொன்றதாக தகவல் வெளியானதால் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக வளி மண்டல துணை இயக்குனர் அருண் குமார் கூறும்போது, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவாகிய இரண்டு புலிகளின் உருவம் தேடப்படும் புலி இல்லை. எனவே சிங்காரா செல்லும் சாலை, ஜே.டி சாலை உப்பு பள்ளம் போன்ற பகுதிகளில் கூடுதலாக 25 கேமிராக்கள் பொருத்தப்பட்டு புலியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.