நடிகை மாளவிகா மோகனன் காட்டுப்புலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார் . இவர் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . இதையடுத்து இவர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்ததால் தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் .
தற்போது நடிகர் தனுஷின் 43வது படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர இவர் பாலிவுட்டில் பிரபல நடிகர் சித்தானந்த சதுர்வேதிக்கு ஜோடியாக ‘யுத்ரா’ படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டு புலிக்கு அருகில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.