புளோரிடா மாகாணத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவில் பாதிக்கப்படும் ஐந்தில் ஒருவர் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆகவுள்ளார். இந்த நிலையில் போன வாரம் மட்டும் மாகாணத்தில் 1,10,000 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதற்கு முந்திய வாரம் 73,000மாக பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. மேலும் ஜூன் 11ஆம் தேதி வரை 10 ஆயிரமாக இருந்த பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்துள்ளது.
தற்போது புளோரிடா மாகாணத்தில் இருக்கும் சூழ்நிலையானது தடுப்பூசி போடுவதற்கு முன்னர் ஜனவரி மாதத்தில் இருந்த நிலைமையை போன்றுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன. இதில் ஒரு வாரத்திற்கு மட்டும் 450 பேர் உயிரிழக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை 39 ஆயிருக்கும் மேலானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மக்கள் வெப்பத்தினால் வீடுகளுக்குள் AC போன்ற குளிர் சாதனங்களை பயன்படுத்துவதே கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க காரணம் என்று புளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார்.