பருப்பு சாத பொடி
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை – 1 கப்
பூண்டு – 1
சிகப்பு மிளகாய் – 10
கொப்பரை தேங்காய் – 1 ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் நெய் விட்டு பொட்டுக் கடலை, சிகப்பு மிளகாய் சேர்த்து வறுத்து சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் கொப்பரை தேங்காய், பூண்டு சேர்த்து அரைத்து எடுத்தால் பருப்பு சாத பொடி தயார் !!! நெய்யுடன் சாப்பிட அருமையாக இருக்கும் .