புல்வாமா தாக்குதலில் பாதுகாப்பு படையினரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை ஒட்டி குஜராத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். காஷ்மீர் விவகாரம் வடகிழக்கு மாநில பிரச்சனைகள் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை என அனைத்து விஷயங்களிலும் நாடு ஒற்றுமையின் புதிய பரிமாணத்தைக் எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலில் பாதுகாப்பு படையினரின் தியாகத்தை கொச்சைப்படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். நாட்டின் நலன் கருதி இது போன்ற செயல்களை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் பயங்கரவாதம் வன்முறையால் யாரும் பயனடைய முடியாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.