நாட்டையே அதிர்ச்சிகுள்ளாகிய ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவம் எப்படி நடந்தது பார்க்கலாம். ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று மாதங்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். அப்படி விடுமுறை முடிந்து திரும்பிய ராணுவ வீரர்கள் வியாழக்கிழமை அதிகாலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டுள்ளனர். மொத்தம் 2547 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 78 வாகனங்களில் புறப்பட்டனர். அவர்களின் 89% பேர் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பியர். ஜம்மு நகர் நெடுஞ்சாலையில் ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது லியோ போரா பகுதியில் எதிரே மறுபுறத்தில் வந்து ஸ்கார்பியோ கார் ஒன்று திடிரென எதிர்நோக்கி வீரர்கள் வந்த வாகனம் மீது மோதியது.
அப்போது ராணுவ வீரர்கள் வந்த வாகனமும் மோதிய வாகனமும் வெடித்து சுக்கு நூறாக நொறுங்கியது. ஜம்முவில் இருந்து நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீநகர் செல்ல சுமார் 8 1/2 மணி நேரம் ஆகும். ஆனால் பனிமூட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக உள்ளூர்வாசிகள் யாரும் இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தவில்லை. அதேபோல் வீரர்களை அழைத்துச் செல்லும் பொழுது முன்கூட்டியே அங்குள்ள பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கடந்த 8ஆம் தேதியே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது. ராணுவ வீரர்கள் செல்ல பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த 78 வாகனங்களில் சுமார் ஆயிரம் வீரர்கள் பயணிக்கலாம்.
ஆனால் அதையே வாகனங்களில் 2547 வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை என்பதால் சாலைகளின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த தடுப்புகள் மிகக் குறைந்த உயரத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எதிர் திசையில் வரும் வாகனங்கள் எளிதாக தடுப்புகளை தாண்டி மறு பக்கத்திற்கு செல்ல முடியும். அப்படி ஸ்கார்பியோ காரில் எதிர்புறத்தில் அந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஆதியில் அகமது எளிதாக சாலை தடுப்பை கடந்து மறுபுறம் வந்த ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளர். இதனையடுத்து பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலை நடத்திய அகமது தார் என்ற தீவிரவாதி பேசிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு மவுலானா மசூத் அசார் என்பவர் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தலைமை தாங்கியுள்ளார். இவருடைய முக்கிய நோக்கம் என்பது ஜம்மு காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைப்பதே ஆகும். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் தாக்குதல் எப்போதும் அரசாங்கத்தை குறிவைத்து பெரும்பாலும் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணம் அரசாங்கத்தை தாக்குவதன் மூலம் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் மீது ஏற்படும் அவநம்பிக்கையானது ஜம்மு காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு சாதகமாக அமையும் என தீவிரவாதிகள் கருதுவதே ஆகும்.