Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கணவன்… இராணுவத்தில் இணைந்த மனைவி… நெகிழ வைத்த சம்பவம்..!!

2018 இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி தற்போது ராணுவத்தில் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018 இல் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் என்பவர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக 2019ஆம் ஆண்டு ஷவுர்யா சக்ரா என்ற விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவ வீரரின் மனைவி நிக்கிதா கவுல் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அது என்னவென்றால் அவரும், ராணுவத்தில் சேர்ந்து பயிற்சிகளை முடித்துவிட்டு வடக்கு கமாண்டர் ஜென்ரல் ஒய்.கே. ஜோஷியிடம் ஸ்டார்களை வாங்கியுள்ளார்.

இதை பெருமையாக ராணுவ அமைச்சகம் தனது டுவிட்டரில் பதிவில் உள்ளது. அந்த வீடியோவில் நிக்கிதா கம்பீரமாக நடந்து வந்த ஸ்டார்களை தனது தோள்களில் பெறுகிறார். திருமணமான 9 மாதங்களில் கணவனை இழந்த நிக்கிதா சோர்ந்து போகாமல், ராணுவத்தில் சேர்ந்து தனது பணியை செய்ய வேண்டுமென்றும் முழுமூச்சில் ராணுவத்தில் சேருவதற்கான தகுதி தேர்வு எழுதி, எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று தற்போது ராணுவ அதிகாரியாக கணவரை போலவே தேசத்திற்கு சேவையாற்ற தொடங்கியுள்ளார்.

Categories

Tech |