கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்க மாட்டேன் என உமாபாரதி கூறியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியில் கட்டப்படுகின்ற பிரம்மாண்டமான ராமர் கோவிலுக்கு வருகின்ற 5 ஆம் தேதி பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கவுள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இவர்களைத் தவிர ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கடியார் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய தலைவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்தவாறே காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்க மாட்டேன் என உமாபாரதி கூறியுள்ளார். இது பற்றி உமா பாரதி கூறும்போது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன். பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் வந்து சென்ற பின்னர், நான் அயோத்திக்கு செல்வேன்” என்று கூறியிருக்கிறார்.