50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட பூமி தற்போது வேகமாக சுழன்று கொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நமது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை எடுத்துக் கொள்கிறது. இதனைதான் நாம் ஒரு வருடம் என்று கூறுகிறோம். மேலும் தன்னைத் தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் பூமி தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதாவது சுழல்கின்ற வேகத்தில் 1 வினாடி மாறுபாடு உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். சாதாரன மற்றும் டிஜிட்டல் கடிகாரங்களில் ஒரு வினாடி மாறுபாட்டினை கண்டறிவது என்பது முடியாத ஒரு காரியம் ஆகும். எனினும் விஞ்ஞானிகள் இதனை அணிக்கடிகாரத்தின் மூலமாக கண்டுபிடித்துள்ளனர்.